தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எலான் மஸ்க்-ன் தகவல்

Updated in 2021-Jan-10 04:09 AM

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல்... வாட்ஸ் அப்புக்கு பதில் சிக்னல் செயலியை பயன்படுத்தும்படி டுவிட்டரில் தன்னை பின்தொடர்வோருக்கு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், சிக்னல் எனும் பெயரை சரியாக புரிந்து கொள்ளாமல் சிக்னல் அட்வான்ஸ் எனும் வேறொரு நிறுவனத்தில்  அதிகம் பேர் முதலீடு செய்த தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிகம் பேரால் தகவலை பரிமாறி கொள்ள பயன்படும் செயலியான வாட்ஸ் அப், அண்மையில் புதிய வகை கொள்கையை வெளியிட்டு அதை ஏற்று கொள்வோர் மட்டுமே தனது சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.

இந்நிலையில் டுவிட்டரில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில்,  சிக்னலை பயன்படுத்தும்படி கேட்டு கொண்டிருந்தார். இதை சரியாக புரிந்து கொள்ளாமல், தொழில்நுட்ப நிறுவனமான சிக்னல் அட்வான்சில் அதிகம் பேர் முதலீடு செய்தனர்.

இதனால் அதன் பங்கு மதிப்பு 12 மடங்கு உயர்ந்துள்ளது.  சிக்னல் நிறுவனம் தரப்பில், சிக்னல் அட்வான்சுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என விளக்கமளித்துள்ளது.