மாணவனுக்காக பேருந்து நேரத்தை மாற்றி நடவடிக்கை 

Updated in 2021-Jan-10 04:14 AM

மாணவனுக்காக நேரம் மாற்றம்... ஒடிசா மாநிலத்தில் பேருந்தின் புறப்படும் நேரத்தால் பள்ளி செல்ல தாமதமாவதாக மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பேருந்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புவனேஸ்வரில் வசித்து வரும் சாய் அன்வேஷ் அம்ருதம் பிரதான் என்ற மாணவன் காலை 7.40 மணிக்கு பேருந்து புறப்பட்டதால் பள்ளிக்கு தினமும் காலதாமதமாக செல்லும் சூழ்நிலை உருவானது. இதனை அடுத்து அந்த மாணவன் டுவிட்டர் வாயிலாக தனது புகாரை பதிவு செய்து அதை போக்குவரத்து துறைக்கு அனுப்பி இருந்தான்.

அதில் தமக்கு பள்ளி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது என்று கூறியிருந்த நிலையில், அந்த பேருந்து புறப்படும் நேரம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.