பிரிட்டனில் இதுவரை கொரோனாவால் 80 ஆயிரம் பேர் பலி

Updated in 2021-Jan-10 04:22 AM

பலி எண்ணிக்கை 80 ஆயிரம்... பிரிட்டனில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. 

பிரிட்டன் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 59,937 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,17,409-ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. 

தொற்று பாதிப்புக்கு மேலும் 1,035 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80,868 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,406,967-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 15,29,574 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.