வெற்றி பெறுவதற்கு முதல் செசன் முக்கியம்டு வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து

Updated in 2021-Jan-10 07:25 AM

வெற்றி பெறுவதற்கு முதல் செசன் முக்கியம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3-வது போட்டி கடந்த 7-ந் தேதி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களும், இந்திய அணி 244 ரன்களும் எடுத்தது. 94ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழபிற்கு 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இதனையடுத்து 407 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்திருந்த்து. தொடர்ந்து இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியதாவது:

இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் முதல் செசன் மிகமிக முக்கியமானது. முதல் செசனில் விக்கெட் இழக்கக் கூடாது. களத்தில் இருக்கும் இருவரும் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். 

மெல்போர்னில் ரஹானே செஞ்சூரி அடித்தார். புஜாரா முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.