ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேன்ட் இந்தியாவில் அறிமுகம்

Updated in 2021-Jan-11 09:11 AM

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்... ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேண்ட்டினை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் ஆனது 1.1′ இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் பேண்ட் ஆனது 14 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் ஆனது ரியல் டைம் ஹார்ட் ரேட் சென்சார் கொண்டதாகவும், SpO2 மானிடர் மற்றும் ஸ்லீப் மானிட்டர் கொண்டதாகவும் உள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் ஆனது 13 வகையான ஸ்போர்ட்ஸ் மோடு, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்பேண்ட் டூயல் கலர் ஸ்ட்ராப் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை சீம்லெஸ் ஒன்பிளஸ் போன் கனெக்டிவிட்டியினைக் கொண்டுள்ளது.