இன்றைய ராசிப்பலன் - 12.01.2021

Updated in 2021-Jan-12 12:08 PM

12-01-2021, மார்கழி 28, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.23 வரை பின்பு அமாவாசை.

மூலம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 06.21 வரை பின்பு உத்திராடம்.

அமிர்தயோகம் காலை 07.37 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 06.21 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம்.

நேத்திரம் - 0.

ஜீவன் - 1/2.

சர்வ அமாவாசை.

ஸ்ரீ அனுமந்த ஜெயந்தி.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

மேஷம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று மந்தநிலை இருக்கும். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்க கூடும். சிக்கனமாக செயல்பட்டால் பணம்பிரச்சனைகள் தீரும். தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. லாபம் ஓரளவு கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலன் கிடைக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது கவனமுடன் இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் துணிவுடன் செய்வீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல கூடும். உத்தியோகத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு நல்லது நடக்கும். கொடுத்த கடன்கள் இன்று அனைத்தும் வசூலாகும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். சுப காரியங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் லாபம் இருக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் இருக்கும். பணவரவு ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் தொல்லை யாவும் படிப்படியாக குறையும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

கன்னி

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக அலைச்சலும் மன குழப்பம் இருக்கும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை கொடுக்கும். கடன் தொல்லை தீரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சுபகாரியங்கள் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அனுகூல பலன் கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். திருமண சுப காரியங்களில் அனுகூல பலன் கிடைக்கும். வீட்டு தேவை பூர்த்தியாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

உங்கள் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். சுப காரியம் கைகூடும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி இருக்கும்.உறவினர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.புதிய தொழில் தொடங்கினால் முயற்சிகளில் சற்று கவனம் வேண்டும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியான பேச்சுவார்த்தைகளில் சாதக பலன் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். சேமிப்பு உயரக்கூடும்.