ஆணைக்குழு அறிக்கைக்காக காத்திருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம்

Updated in 2021-Jan-12 12:17 PM

சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம்... ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கப் பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மேலும் அதனை ஆராய்ந்து மேலும் சாட்சியங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொறுப்புக் கூறவேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரால் 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க பிரஜைகளும் இருப்பதால், பொருத்தமான தகவல்கள் அமெரிக்க நீதிமன்றங்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.