எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை; சுரேஷ் சக்கரவர்த்தி அதிரடி பதில்

Updated in 2021-Jan-12 08:49 AM

பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வரவில்லை. அதனால் வீட்டுக்குள் செல்லவிலலை என்று சுரேஷ். சக்கரவர்த்தி கூறியுள்ளார் .

18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. கடந்த வாரம் முன்னர் வரை 11 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் மீதம் இருந்த 7 பேரும் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

இதில் சோம் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் அவர் நாமினேஷனில் இருந்து நீக்கப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். ஷிவானி நாராயணன் மட்டும் குறைந்த வாக்குகளைப் பெற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட மீதமிருக்கும் 6 பேரும் இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளனர்.

இம்முறை டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் பார்வையாளர்களிடம் எழுந்திருப்பதோடு, ஆரி வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளது என்பதும் அவர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். அதேவேளையில் வேல்முருகன், சனம் ஷெட்டி, அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் வரும் நாட்களில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவில்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு பதிலளித்திருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி, இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

சுரேஷ் சக்ரவர்த்தியின் பதிலால் பிக்பாஸ் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.