துக்ளக் 51ம் ஆண்டுவிழாவில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்

Updated in 2021-Jan-12 08:51 AM

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ம் தேதி நடக்கும் துக்ளக் பத்திரிகையின் 51 வது ஆண்டு விழாவில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டா கலந்து கொள்கிறார்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் துக்ளக் பத்திரிகையின் 51 வது ஆண்டு விழா வரும் 14ம் தேதி நடக்கிறது. மாலை 6.30 அளவில் நடக்கும் விழாவில் இன்றைய அரசயில் என்ற தலைப்பில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் பேசுகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு விழாக்களில் இருந்து சோ, பிரதமர் மோடி, அத்வானி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் சில கருத்துக்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.