கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டேன்; நடிகர் ராம்சரண் டுவிட்டர் பதிவு

Updated in 2021-Jan-12 09:24 AM

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்,அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி தான் அறிகுறி எதுவுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் ராம்சரண் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில், எனக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்த செய்தியை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. விரைவில் என்னுடைய பணியில் ஈடுபட உள்ளேன். அதற்காக காத்திருக்க முடியவில்லை. உங்களது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.