இன்றைய ராசிப்பலன் - 13.01.2021

Updated in 2021-Jan-12 08:47 AM

13-01-2021, மார்கழி 29, புதன்கிழமை, அமாவாசை திதி பகல் 10.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை.

உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.28 வரை பின்பு திருவோணம்.

அமிர்தயோகம் பின்இரவு 05.28 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் - 0.

ஜீவன் - 0.

போகிப் பண்டிகை.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 - 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

 

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கவேண்டும். உத்தியோகத்தில் மந்த நிலை உண்டாகும். வியாபாரம் நல்லபடியாக இருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நெருக்கடிகள் நீங்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு பாதிப்பு மன உளைச்சலும் இருக்கும். உத்யோகத்தில் வீண் பிரச்சனைகள் இருக்கும்.உங்கள் ராசிக்கு பகல் 12.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் வேண்டும்.பெரிய தொகையை பிறரை நம்பி கொடுப்பது நல்லது இல்லை.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் இருக்கும். எதிர்பாராத வீண் விரயம் உண்டாகும்.பகல் 12 .05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல் பட வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் வேண்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் சுப செய்தி வரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்.பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழக் கூடும். தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தாராளமான பணவரவு அமையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் இருக்கும்.தொழிலில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உத்யோகத்தில் போட்டி பொறாமைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பொருள் சேர்க்கை இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் சிவ மனஸ்தாபம் இருக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்த சுமூக நிலை இருக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நல்லது. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். வீட்டில் கருத்து வேறுபாடு இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவியால் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் லாபம் சுமாராக அமையும். பூர்வீக சொத்துகளால் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். சீக்கிரமாக செயல்பட்டால் பணம் பிரச்சனையை நீக்கலாம். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் அனுகூலம் கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதன் பலனை இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சனைகள் இருக்கும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக்கடன் அமையும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் இருக்கும்.அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கவுரவ பதவி அமையும். உத்தியோக ரீதியில் வெளியூர் பயணம் செல்லக் கூடும். வாகனம் வாங்கும் யோகம் இருக்கும்.

மீனம்

உங்கள் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி கிடைக்கும்.உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தாலும் கூட நண்பராக செயல்படுவார்கள். புதிய வழியில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும்.