திபெத்தில் அண்டர் கிரவுண்ட் ராணுவ வசதியை ஏற்படுத்தும் சீனா

Updated in 2021-Jan-12 09:19 AM

சீனா ஏற்படுத்தும் அண்டர்கிரவுண்ட் ராணுவ வசதி... திபெத்தில் மிகப்பெரிய அண்டர்கிரவுண்ட் ராணுவ வசதியையும், ராணுவ சரக்குப்போக்குவரத்து மையத்தையும் சீனா கட்டமைத்து வருவதாக, செயற்கைக்கோள் புகைப்படங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

திபெத்தின் Xigatse பகுதியில் விமான நிலையம் அருகே, சீனா ஏற்படுத்தி வரும் இந்த புதிய அண்டர்கிரவுண்ட் கட்டுமானம், ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கான சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் ராணுவ நடவடிக்கைகளுக்கு வசதியாக அக்சாய் சின் முதல் அருணாச்சலப்பிரதேசம் எல்லை வரை உள்கட்டமைப்புகளை சீனா மேம்படுத்தி வருவதை புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக குறிப்பிடுகின்றனர்.

சீனாவின் பிற பகுதிகளில் இருந்து திபெத்திற்கும், திபெத்திற்குள்ளும், பெரும் எண்ணிக்கையில் படைகளை நகர்த்துவதே சீனாவின் நோக்கம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.