டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்த இருந்த போராட்டம் தோல்வியடைந்தது

Updated in 2021-Jan-12 09:21 AM

போராட்டம் தோல்வி... அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர்  நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு  போராட்டம் நடத்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

மிகப்பெரிய அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் ஒருசிலர் மட்டுமே வந்திருந்தனர். இதனையொட்டி டுவிட்டர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் அனைவரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.