மலேசியாவில் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம்

Updated in 2021-Jan-12 09:25 AM

அவசர நிலை பிரகடனம்... கொரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 555 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் முஹைதீன் யாசின் முழு ஊரடங்கை அறிவித்து இருந்தார்.

இது தொடர்பான பிரதமரின் பரிந்துரையை ஏற்ற மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமத் ஷா, ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்.