விண்ணுக்கு சமோசாவை அனுப்பும் முயற்சியில் இறங்கிய சிற்றுண்டி உணவகம்

Updated in 2021-Jan-12 09:26 AM

சமோசாவை விண்ணுக்கு அனுப்பிய உணவகம்...பிரபல சிற்றுண்டி உணவகமான சாய் வாலா, தனது உணவு பொருளான சமோசாவை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்திய சிற்றுண்டி உணவகமான சாய் வாலா, தனது உணவு பொருட்களை பிரபலத்தும் பொருட்டு, வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளது.

ஹீலியத்தால் ஆன பலூனில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி, பாராசூட் வடிவில் வடிவமைத்து அதில், சமோசா உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து பேக் செய்து விண்ணுக்கு அனுப்பியது.

ஆனால், அதற்கு மறுநாள், சமோசாவை சுமந்து சென்ற பலூன் பிரான்ஸில் கீழே விழுந்து மரத்தில் சிக்கி உடைந்தது.

இது குறித்து சாய் வாலா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் தகவல் அளித்ததை பார்த்து, நபர் ஒருவர் அந்த இடத்திற்கு சென்று சமோசாவை கைப்பற்றியுள்ளார்.