தமிழக வீரர் நடராஜனை தமிழில் பேசி உற்சாகப்படுத்தும் மயங்க் அகர்வால்

Updated in 2021-Jan-16 04:27 AM

தமிழில் பேசி உற்சாகப்படுத்தும் வீரர்கள்... ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பிரிஸ்பனில் இன்று நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஒரு வீரர் தமிழில் பேசி அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார். அவர்தான் கர்நாடகாவை சேர்ந்த மயங்க் அகர்வால். இவர் டெஸ்ட் போட்டிக்கு அறிமுக வீரராக களம் கண்டு இருக்கும் நடராஜனுக்கு சிறப்பான அறிவுரைகளை தமிழில் வழங்கி இருக்கிறார்.

அதாவது 'மச்சி இப்படி போடு. மச்சி பந்தை உள்ளே போடு', 'நல்லா இருக்கு. எனத் தொடந்து நடராஜனுடன் மயங்க் அகர்வால் தமிழிலேயே பேசி உரையாடலை ஸ்டெம்ப் மைக்கில் கேட்ட ரசிகர்கள் அதை சமூக வலைத்தளத்தில் கிராப் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்களான அஸ்வின், நடராஜனைத் தவிர வாஷிங்டன் சுந்தரும் களம் இறங்கி இருக்கிறார். இதனால் தமிழ் குரல் 3 ஆக அதிகரித்து இருக்கிறது. இவர்களைத் தவிர ஏற்கனவே அணியில் இருக்கும் தென்னிந்திய வீரர்களான கே.எல்.ராகுல், ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சன் போன்றோருக்கும் தமிழ் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் தமிழ் குரல் வலுத்து வருகிறது. மேலும் அவ்வபோது போட்டிக்கு இடையே இவர்கள் பேசும் உரையாடல்களும் மக்களை அதிகம் ஈர்க்கிறது என்பதை பார்க்க முடிகிறது.