இது எனது வெற்றி அல்ல உழைக்கும் வர்க்கத்தின் வெற்றி; ஆரி மகிழ்ச்சி

Updated in 2021-Jan-18 07:23 AM

இது எனது வெற்றி அல்ல உழைக்கும் வர்க்கத்தின் வெற்றி... பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆரி கோப்பையுடன் "இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லை, உழைக்கும் வர்கத்தின் வெற்றி" என கூறியுள்ளார். மேலும் இந்த வாரம் அவரின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கில் மக்களை சந்திப்பதாக கூறியுள்ளார்.