சம்பளம் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை; பிடிவாதம் பிடிக்கும் கீர்த்தமான நடிகை

Updated in 2021-Jan-19 03:07 AM

சம்பளத்தை குறைக்கும் பேச்சே கிடையாது...தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இளம் நடிகை சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை தற்போது சம்பளத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

இயக்குனர் ஒருவர் கதை சொல்ல இந்த "கீர்த்தமான" நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை 2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், முடியவே முடியாது என்று அடம் பிடிக்கிறாராம் நடிகை.