களத்தில் சந்திப்போம் படம் தைப்பூசத்தன்று வெளியாகிறது

Updated in 2021-Jan-19 03:11 AM

தைப்பூசத்தன்று ரிலீஸ்... ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தைப்பூசத்தன்று ரிலீசாக உள்ளது.

ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். 

கொரோனா பிரச்னையால் ரிலீசாகாமல் முடங்கியிருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தைப்பூசத்தன்று (ஜனவரி 28) தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.