நடிகை ரம்யாபாண்டியனை மேள தாளத்துடன் வரவேற்ற குடும்பத்தினர்

Updated in 2021-Jan-19 03:15 AM

பிக்பாஸ் போட்டி முடிந்து வீடு திரும்பிய நடிகை ரம்யா பாண்டியனை மேள தாளம் முழங்க அவரது குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் , மொட்டை மாடியில் இடுப்பை கவர்ச்சியாக காட்டி திடீரென பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சினிமா வாய்ப்புகள் நிறைய வரும் என காத்திருந்த அவருக்கு எதுவும் வரவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார்.

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடக்கம் முதலே சிரித்துக்கொண்டே சேவ் கேம் விளையாடினார். குறிப்பாக ஆரியை அவர் தொடர்ந்து நாமினேட் செய்து வந்தார். ஏனெனில், ஆரி சிறப்பாக விளையாடியதால் , அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என நினைத்தார்.. ஆனால், வெளியே ஆரிக்கு மக்களின் ஆதரவு இருந்ததால் அவரை வெளியேற்ற முடியவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் ஆரியின் ஆதரவாளர்கள் ரம்யா பாண்டியனை கடுமையாக விமர்சித்தனர். ஒருபக்கம் ரம்யாவுக்கு ஆதரவும் இருந்தது. ஆனால், இறுதி போட்டியில் ஆரி வெற்றி பெற்றார். 100 நாட்களுக்கும் மேல் பிக்பாஸ் வீட்டிலிருந்த அவர் இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய அவரை அவரின் குடும்பத்தினர் மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோவை ரம்யா தனது இன்ஸ்டாகிராமில். பகிர்ந்துள்ளார்.