வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்த புதுச்சேரி முதல்வர்

Updated in 2021-Jan-19 03:18 AM

வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்தார்... புதுச்சேரி சட்டப்பேரவையில் மூன்று வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்து முதல்வர் நாராயணசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே புதுச்சேரி சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது மத்திய அரசால் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பேரவையில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் முன்மொழிந்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை வஞ்சிகும் சட்டங்களை பேரவையில் கிழிக்க சபாநாயகர் அனுமதி தரவேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அரசுக்கப 5 ஆண்டுகள் காலதாமதம் ஏற்படுகின்றது என்றும் மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள 34 கோப்புகள் கிரண்பேடி மூலமாக டெல்லிக்கு சென்று தூங்கின்றது எனவபநி அவர் தெரிவித்தார்.
 
நாடு நெருக்கடியான நிலையில் சற்றே வளர்ச்சியில் உள்ள ஒரே துறை விவவசாயம் தான் என்றும் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு, கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்கள் மக்கள் விரோத கார்பரேட் ஆதரவு சட்டங்கள் என முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டினார்.

மக்கள் விரோத கார்பரேட் ஆதரவு சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பேரவையில் நாராயணசாமி வலியுறுத்தினார். மூன்று வேளாண் சட்ட நகல்களை பேரவையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கிழித்து எரிந்தார். புதுச்சேரியில் 6 மாநிலமாக வேளாண் திருத்தத் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.