சில மாடல் கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி நிறுவனம்

Updated in 2021-Jan-19 08:11 AM

தங்கள் தயாரிப்பு கார்களில் சில மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை 34 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மூலப்பொருட்களுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதால் அதனை ஈடுசெய்யும் விதமாக குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை உயர்த்தியுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், எந்தெந்த மாடல் கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கவில்லை.