அருமையான ருசியில் மைசூர் ரசம் தயார் செய்யும் முறை

Updated in 2021-Jan-22 01:30 AM

அருமையான ருசியில் மைசூர் ரசம் தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:புளித்தண்ணீர் – 1 கப்; தக்காளி – 1; துவரம் பருப்பு – 1/2 கப்(வேக வைத்தது); எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு; கொத்தமல்லி தழை – சிறிதளவு.

அரைக்க தேவையானவை: தனியா – 1 டீஸ்பூன்; கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்; காய்ந்த மிளகாய் – 5; சீரகம் – 1/2 டீஸ்பூன்; மிளகு – 1/8 டீஸ்பூன்; தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க தேவையானவை: காய்ந்த மிளகாய் – 1; எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்- சிறிதளவு
 
செய்முறை: முதலில் அரைக்க தேவையான பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக்கொள்ளவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் புளித்தண்ணீர், தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

பின்பு இதில் 2 டீஸ்பூன் அரைத்த ரசப்பொடியை போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு பின்பு வேகவைத்த பருப்பை இதில் சேர்க்கவும். இது நுரைத்து பொங்கும் போது இறக்கவும். இதில் தாளிக்க தேவையான பொருட்களை தாளித்து சேர்க்கவும். கடைசியாக மேலே கொத்தமல்லி தழையை தூவினால் போதும் மணமான மைசூர் ரசம் தயார்.