சிலியில் நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய பெண் அணி வெற்றி

Updated in 2021-Jan-27 03:21 AM

சிலி அணியை வீழ்த்தியது இந்திய அணி...ஜுனியர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, சிலி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் சிலியில் நடைபெற்ற சிலி நாட்டின் சீனியர் பெண்கள் ஹாக்கி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. 

சிலி சுற்றுப்பயணத்தின் ஐந்தாவது போட்டியில் விளையாடிய சங்கீதா குமாரி மற்றும் சுஷ்மா குமாரி ஆகியோர் கடந்த காலாண்டில் கோல்களை அடித்து இந்தியாவுக்கு வெற்றியைக் தேடி தந்தனர்.