ரூ.10 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியும் வெப் தொடரில் நடிக்க மறுத்த பெரிய நம்பர் நடிகை

Updated in 2021-Feb-01 01:32 AM

ரூ.10 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறிய போதும் நெருக்கமான காட்சிகள் இருந்ததால் வெப் சீரிஸ்-ல் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் பெரிய நம்பர் நடிகை.

தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் பெரிய நம்பர் நடிகை ரூ.10 கோடி சம்பளம் கொடுப்பதாக தயாரிப்பாளர் கூறியபோதும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் பெரிய நம்பர் நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதிக சம்பளம் கொடுத்தால், அவர் நடிக்க சம்மதிப்பார் என்ற நம்பிக்கையுடன் ஒரு இந்தி பட தயாரிப்பாளர் அந்த நடிகையை அணுகி உள்ளார். 

தனது வெப் தொடரில் நடித்து கொடுத்தால், ரூ.10 கோடி சம்பளம் தருவதாக கூறினாராம். அந்த தொடரின் கதைப்படி, நெருக்கமான காதல் காட்சிகளும், கட்டிப்பிடிக்கும் காட்சிகளும் நிறைய இருந்ததால், அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம். இது அந்த தயாரிப்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்து விட்டதாம். இந்த தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.