மீண்டும் காதலில் விழுந்த வாரிசு நடிகை; ரகசியம் காக்கிறார்

Updated in 2021-Feb-06 02:21 AM

கோலிவுட்டில் பிரபலமான வாரிசு நடிகை தன்னுடைய காதலை மறைத்து வருகிறார். 

இந்த வாரிசு நடிகை ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தார். காதலுக்கு பெற்றோர் சம்மதிக்க, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தார் நடிகை. இதனால் நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்த நிலையில், திடீர் என்று காதலர்களுக்குள் என்ன நடந்ததோ பிரேக் அப் ஆகிடுச்சு. 

இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வாரிசு நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய உள்ளார். ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம். காதலர் யார் என்பதை லீக் செய்யாமல் படு ரகசியம் காத்து வருகிறார்.