கனமழையால் நவரை பருவ பயிர் நடவு செய்வதில் தாமதம்

Updated in 2021-Feb-10 10:35 AM

டிசம்பர் முதல், நவரை பருவம் துவங்கிய நிலையில், கனமழையால், பயிர் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்லபாக்கம் வேளாண் விரிவாக்க மையத்தின் கீழ், மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நூத்தஞ்சேரி உட்பட, 32 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 2,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.

இங்குள்ள விவசாயிகள், பி.பி.டி., எனப்படும், பாபட்லா பொன்னி ரக நெல் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சம்பா, சொர்ணவாரி மற்றும் நவரை என, மூன்று பருவங்களில், பயிர் நடவு நடைபெறுகிறது. 2020 - -2021ம் ஆண்டில், இதுவரை முடிந்துள்ள, சம்பா மற்றும் சொர்ணவாரி பருவங்களில், 1,410 ஏக்கர் அளவிற்கு, பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல், நவரை பருவம் துவங்கிய நிலையில், கனமழையால், பயிர் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில், இந்த பருவம் முடிவடையும். இதனால், நடப்பாண்டில், 2 ஆயிரம் ஏக்கர் வரை, பயிர் நடவு செய்யப்படும் என, எதிர்பார்ப்பதாக சிட்லபாக்கம், வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.