கோவை வடவள்ளியில் விற்பனைக்கு வந்த 30 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன்

Updated in 2021-Feb-20 12:46 PM

30 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்... வடவள்ளியில் உள்ள சில்லறை விற்பனை மீன் கடையில் 30 கிலோ எடை கொண்ட ஐந்தரை அடி வஞ்சரம் மீன் விற்பனைக்கு வந்தது.

கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் மீன் விற்பனை கடையில் 30 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன் வரத்தாகி இருந்தது. வழக்கமாக 18 கிலோ வரை ஒரே மீனாக வரத்து வந்துள்ளது. 30 கிலோ வஞ்சரம் மீன் வரத்தாகியிருப்பது இதுவே எங்கள் கடையில் முதல் முறை என்று மீன் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

மிகப்பெரிய மீனை காண அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்த நிலையில், அந்த மீனை ஒரு வாடிக்கையாளர் ஆர்வமுடன் வாங்கி சென்றார்.