ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் திடீர் என சந்தித்த கமல்

Updated in 2021-Feb-20 09:25 AM

ரஜினிகாந்த் - கமல் திடீர் சந்திப்பு... மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று (20 ம் தேதி) நடிகர் ரஜினியை திடீரென சந்தித்து பேசினார். இருவரது சந்திப்பில் அரசியல் ஏதும் பேசப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.

மக்கள் நீதி மைய கட்சி தலைவர் நடிகர் கமல் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை துவக்கி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் இன்று கமல் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்றார்.அங்கு 40 நிமிடம் இருவரும் சந்தித்து பேசினர். இது குறித்து கமல் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் விசாரித்த போது, கமல் ரஜினியின் 40 ஆண்டு கால நண்பர். ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றிருக்கலாம்.

இதிலும் முக்கிய அரசியல் பேச்சு இருந்தால் விரைவில் நடக்கவும் கட்சி நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பார் என்றார். ரஜினி அரசியல் கட்சி துவங்க போவதில்லை என அறிவித்த பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன் பேட்டி அளித்த கமல் தனது அரசியல் பயணத்திற்கு ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.