மகாராஷ்டிராவில் புதிதாக 6281 பேருக்கு கொரோனா தொற்று

Updated in 2021-Feb-20 09:31 AM

புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா... மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,92,913 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,567 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 40 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 19,92,530 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 51,753 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 48,439 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் புதிதாக 897 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,18,207 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 571 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,99,206 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 11,438 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 6,900 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.