கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டினர் வர தடை நீட்டிப்பு

Updated in 2021-Feb-21 07:42 AM

வெளிநாட்டினர் வர தடை... கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, வெளிநாட்டினர், குவைத்துக்கு வர விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டினர் யாரும் குவைத்துக்கு வரவேண்டாம் என அந்நாட்டுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வெளிநாடுகளில் வசித்து வரும் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. அவ்வாறு குவைத்திற்கு வருபவர்களை ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.