சித்தி-2 சீரியலில் ராதிகாவுக்கு பதில் இனி ரம்யாகிருஷ்ணனா? மீனாவா!

Updated in 2021-Feb-21 07:46 AM

ராதிகா கேரக்டரில் இனி ரம்யா கிருஷ்ணனா? மீனாவா?... சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி வெற்றிபெற்ற சீரியல் ராதிகாவின் சித்தி.

இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சித்தி 2 என புத்தம் புதிய கதைக்களத்துடன் இரண்டாம் பகுதியை எடுத்து வந்தார்.

இதில் சாரதா எனும் கதாபத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா தீடீரென இனி சீரியலில் நடிக்க போவதில்லை என அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதனால் ராதிகாவின் சாரதா கதாபாத்திரத்தில் அவருக்கு இணையான ஒருவர், யார் நடிக்க போகிறார் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராதிகாவுக்கு பதிலாக இனி நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேவயானி அல்லது மீனா நடிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.