6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம்

Updated in 2021-Feb-22 08:32 AM

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி... ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை தொடங்கி உள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டுள்ளது.அதில் வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு என இதனை விளக்கி உள்ள அந்த நிறுவனம், இந்த பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என தெரிவித்து உள்ளது.