கரவாங் நகரில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் மக்கள் வெகுவாக பாதிப்பு

Updated in 2021-Feb-22 11:04 AM

கனமழையால் மக்கள் பாதிப்பு... இந்தோனேஷியாவின் கரவாங் (Karawang) நகரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 4000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தொடர் கன மழையால், சிட்டாரம் (Citarum) ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இம்மாத இறுதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.