அரசியல் தலைவர்களை விடுவிக்க கோரி மியான்மரில் முழு அடைப்பு போராட்டம்

Updated in 2021-Feb-22 11:05 AM

முழு அடைப்பு போராட்டம்... மியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இம்மாத ஒன்றாம் தேதி மியான்மர் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து 3 வாரங்களாக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பல பகுதிகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய போதும், ஆயிரக்கணக்கானோர் கால்நடையாகவும், இரு சக்கர வாகனங்களிலும் அணிவகுத்துச சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.