Updated in 2021-Feb-22 11:35 AM
இரண்டாவதாக ஆண் குழந்தை... பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான கரினா கபூருக்கும், செயிப் அலி கானுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கரினா கபூரும் செயிப் அலிகானும் கடந்த 2012 ல் திருமணம் செய்து கொண்டனர். செயிப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம்.
இந்த தம்பதிக்கு 2016 ல் தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. மீண்டும் கர்ப்பிணி ஆன கரினா கபூருக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் ரித்திமா கபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.