Updated in 2021-Feb-22 11:36 AM
கோலாகலமாக தொடக்கம்... அபுதாபியில் 15 ஆவது சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது.
வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், இஸ்ரேல், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 50 நாடுகளை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கண்காட்சியில் சீனாவை சேர்ந்த அதிநவீன ராணுவ கருவிகளை தயாரக்கும் நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தின.
தொடக்கவிழாவில் ராணுவ பலத்தை பறைச்சாற்றும் விதமாக ஐக்கிய அமீரகம் தனது அதிநவீன ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சாகசங்களை நடத்தியது.