குட்டி பாப்பாவாக நடித்த நிவேதா அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து விட்டார்

Updated in 2021-Feb-23 07:51 AM

குட்டி பாப்பாவாக நடித்தவர் இப்போது கிடுகிடுவென்று வளர்ந்துள்ளார்.

பரதன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அழகிய தமிழ்மகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ரேயா, சந்தானம், என பலரும் நடித்திருந்தாலும் ஒரு படத்தின் முதல் பாதியில் ஒரு சிறுமி நகைச்சுவையாக நடித்திருப்பார்.
 
இப்படத்தில் ஹீரோ ஹீரோயினை தாண்டி நம் மனதில் இடம் பிடித்தது குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சிறுமி நிவேதிதா தான். இந்நிலையில் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நாம் குழந்தையாக பார்த்த சிறுமி நிவேதிதா தற்போது நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.