போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000; அமைச்சர் அறிவிப்பு

Updated in 2021-Feb-24 08:56 AM

இடைக்கால நிவாரணம்... போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் உத்தரவின் பேரில் இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும் என்றும், நாளை அனைத்து பேருந்துகளும் இயங்கும் என்றும் குறிப்பிட்டார். மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.