சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Updated in 2021-Feb-26 03:35 AM

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் டிக்கிலோனா. இதில் நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். 

மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி டிக்கிலோனா படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.