வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனரை கைவிட்ட முன்னணி நடிகர்

Updated in 2021-Feb-26 03:37 AM

முன்னணி நடிகர் ஒருவர் பிரபல இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி கைவிட்டு விட்டாராம். இது கோலிவுட்டில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய சிவமான இயக்குனர், தற்போது உச்ச நடிகரை வைத்து படம் இயக்கி வருகிறார். எப்போதே முடிய வேண்டிய படம் பல பிரச்சனைகளால் தள்ளி போய் இருக்கிறது.

இந்த இயக்குனர் அடுத்ததாக நான்கு முறை தன்னுடைய பயணித்த நடிகரை வைத்து படம் இயக்க திட்டமிட்டார். நடிகரும் ஓகே சொல்லி இருந்தாராம். இந்நிலையில், நடிகர் தற்போது நடித்து வரும் படத்தின் இயக்குனரின் திறமையை பார்த்து அடுத்த படத்தையும் அதே இயக்குனருக்கு கொடுத்து விட்டாராம்.

இதனால் பழைய இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம். இந்த தகவல் கோலிவுட்டில் புகைச்சலை கிளப்பு உள்ளது.