முக்கிய சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் இல்லைட மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

Updated in 2021-Feb-27 02:50 AM

மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு... 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தன்னிச்சையாக தொகுக்கப்பட்டதாகத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மைத்ரிபால சிறிசேன மீதான குற்றச்சாட்டுகளை அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளபோதும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய மற்றும் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்களை அறிவிக்க ஆணைக்குழு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்தோடு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் அரசாங்கம் தனது பங்காளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.