தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து உடன்பாடு எட்டவில்லை

Updated in 2021-Feb-27 10:08 AM

உடன்பாடு எட்டவில்லை... தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து என்னும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பல்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டாலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் தான் தனிப்பட்ட முறையில் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் குறித்த பரிந்துரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அங்கீகாரம் வழங்கவில்லை என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தேசிய பட்டியல் ஆசனத்திற்கு ஒரு உறுப்பினரை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தவறிவிட்டது.

இந்நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.