சாதாரண தரப் பரீட்சைகளுக்கு ஏற்பாடுகள் நிறைவடைந்ததாக தகவல்

Updated in 2021-Feb-28 01:40 AM

ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது... க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை (01) ஆரம்பமாகின்றது.  அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேடமாக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில்  622,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.