இழப்பீடு வழங்க ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தல்

Updated in 2021-Feb-28 01:41 AM

இழப்பீடு வழங்க வேண்டும்... கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு  அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச அழுத்தங்களாலேயே கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதே வேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியல் ரீதியாக தோற்கடிக்க சர்வதேச ரீதியில் சதி செய்யப்படுவதாகவும், அதனைத் தோற்கடிக்க தொடர்ந்து போராடுவோமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.