விஜயகாந்த் தான் முதல்வர் என்ற சுதிஷ் பதிவால் பரபரப்பு

Updated in 2021-Mar-01 09:08 AM

பரபரப்பை கிளப்பிய பதிவு... விஜயகாந்த் தான் முதல்வர் என்று தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதிஷ் முகநூலில் பதிவிட்டுள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதிஷின் பதிவில் விஜயகாந்த் படத்தை நமது முதல்வர் என்றும், நமது கொடி என தேமுதிக கொடியையும், நமது சின்னம் என முரசு சின்னத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாமகவுடன் அதிமுக தொகுதிப் பங்கீடு முடித்துள்ள நிலையில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அமைச்சர் தங்கமணி இல்லத்தில், தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் எல்.கே. சுதிஷ் முகநூலில் பதிவிட்டுள்ளது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.