விருப்ப மனுத்தாக்கல் செய்ய அதிமுகவினருக்கு அறிவிப்பு

Updated in 2021-Mar-01 11:53 AM

நாளை கடைசிநாள்... சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் போட்டியிடுவதற்கான விருப்ப மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் தேதி முதல் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளைக்குள் விருப்பமனுக்களை பெற்று மாலை 5 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென அறிவித்துள்ளனர்.