மிஸ் ஜெர்மனி அழகிப் போட்டியில் 2 குழந்தைகளின் தாய் பட்டம் வென்றார்

Updated in 2021-Mar-01 11:57 AM

2 குழந்தைகளின் தாய் பட்டம் வென்றார்... ஜெர்மனியில் நடந்த மிஸ் ஜெர்மனி அழகிப் போட்டியில் 2 குழந்தைகளுக்கு தாயான 33-வயது பெண் பட்டம் வென்று உள்ளார்.

ஜெர்மனியில் கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் மிஸ் ஜெர்மனி அழகிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு சுற்றுகள் கடந்த நிலையில் இறுதியில் அஞ்சா கல்லன்பாக் என்ற பெண் வெற்றி பெற்று மிஸ் ஜெர்மனி பட்டத்தை தட்டி சென்றார்.

ஏற்கனவே உள்ளூர் போட்டியில் மிஸ் துரிங்கியா என்ற பட்டம் வென்ற அஞ்சா கல்லன்பாக் 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.