கதை கேட்க டைம் இல்லை என்று பந்தா காட்டும் நடிகர்

Updated in 2021-Mar-08 02:00 AM

இளம் நடிகர் ஒருவரிடம் புது இயக்குனர்கள் அணுகினால் கதை கேட்க டைம் இல்லை என்று பந்தா காட்டுகிறாராம். இப்போதே இப்படி இருக்காரே வளர்ந்து வரும் நேரத்தில் இது சரியில்லையே என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது இந்த நடிகரிடம் கதை சொல்ல புது இயக்குனர்கள் முயற்சி செய்தால் டைம் இல்லை என்று சொல்கிறாராம். இதையறிந்தவர்கள் முன்னணி நடிகர்கள் போல் இவரும் இப்போவே பந்தா காட்ட ஆரம்பித்து விட்டாரே என்று குற்றம் சாட்டுகிறார்கள். வளர்ந்து வரும் நேரத்தில் இது தேவையா?