தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளுடன் மீண்டும் நடிக்க ஒல்லிக்குச்சி நடிகர் மறுப்பு

Updated in 2021-Mar-09 03:34 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒல்லிக்குச்சி நடிகர் ஏற்கனவே தன்னுடன் நடித்த நடிகைகளுடன் மீண்டும் ஜோடி சேர மறுக்கிறாராம்.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஒல்லிக்குச்சி நடிகர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், நடிகரோ, தன் படத்தில் நடிக்கும் நடிகை தேர்வில் உஷாராக இருக்கிறாராம்.

காரணம் தான் ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் நடிக்க கேட்டால் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விடுகிறாராம். புதுமுகங்கள் அல்லது பாலிவுட் நடிகைகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். பழைய நடிகைகள், நடிகரிடம் வாய்ப்பு கேட்டால் படக்குழுவினர் மீது பழிப்போட்டு தப்பித்து விடுகிறாராம். இதனால் அவருடன் நடித்த நடிகைகள் கண்களில் அனல் பறக்க உலா வருகின்றனர்.